முன்னதாக 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி நடைபெற்றதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. அந்தத் தேர்வினை இரத்து செய்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது . பின்னர் மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைத்தப் பெறும் என அறிவிக்கப்பட்டது. கோவிட் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு சமீபத்தில் நவம்பர் 28 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. இணைய வழி தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்ததால் தேர்வு மையம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வரும் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இணைய வழியில் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைந்நர் மாண்புமிகு பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்