எம்.பி.சி பிரிவிலிருந்து 20 சதவீத ஒதுக்கீட்லிருந்து , வன்னியர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டது. இதனை எதிர்த்து 25 க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்ததது. தற்போது மதுரை நீதி மன்றம் எம். துரைசாமி , கே. முரளிசங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
முறையான சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு எவ்வாறு வழங்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அரசு தரப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்து முறையான சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.
முந்தைய ஆ.தி.மு.க ஆட்சியில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது வன்னியர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது தி.மு.க ஆட்சியில் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராகப் பொறுப்பேற்ற பின் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்