தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணமும் சேர்த்து பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு பணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வரும் ரொக்கப்பணம் இந்த முறை நிறுத்தப்பட்டால் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதேசமயம் நிதி நிலைமையும் சீராக இல்லை. இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பொங்கல் பண்டிகையின்போது தொடங்கினால் வாக்குறுதியை நிறைவேற்றுவது போல் இருக்கும் அதேசமயம் பொங்கலுக்கு பரிசு கொடுத்தது போன்றும் இருக்கும் என கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.
வருகின்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மேயர் இடங்களையும் கைப்பற்ற குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தொடங்குவது முக்கியம் என்பதால் அதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்