அரசு ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க அரசாணை 12 மவமேது(அவி-IV) நாள் 01-11-2021 இன் படி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகை பின் வருமாறு
முனைவர் பட்டம் (Ph.D) ஊக்கத் தொகை 25000/-
பட்ட மேற்படிப்பு (PG) ஊக்கத் தொகை 20000/-
பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு ஊக்கத் தொகை 10000/-
குறிப்பிட்ட பதவியில் பணியமர்த்தலுக்கு கட்டாய/விருப்பத் தகுதியாக இருந்தால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படவேண்டும்.
கல்வி சார் / இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு இவ்வூக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் பணிபுரியும் பதவிகளுக்குரிய பதவிக்கோ/ அடுத்த உயர்பதவிக்கான பணிகளை ஆற்றுவதற்கோ நேரடி தொடர்புடையதாக இருந்தால் இவ்வூக்கத் தொகை வழங்கலாம்.
அரசுப் பணியாளர் அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் இக்கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இவ்வூக்கத் தொகைக்கு தகுதியுடையவராவர்.
ஒரு பதவிக்கு தேவையான கல்வித் தகுதியை தளர்த்தி பணியமர்த்தப்பட்டு பின்னர் அக்கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் ஊக்கத் தொகை வழங்கக்கூடாது.
அரசு ஊழியர் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற 6 மாத காலத்திற்குள் ஊக்கத் தொகைக்கு உரிமை கோரப்படவேண்டும். 6 மாதத்திற்கு பின்னர் உரிமை கோரினால் பரிசீலிக்கப்படாது.
10.03.2020 அன்று அல்லது அதற்குப் பின்னர் கூடுதல் கல்வி த் தகுதி பெற்றவர்களுக்கு இவ்வூக்கத் தொகையானது அனுமதிக்கப்பட வேண்டும்.
0 கருத்துகள்