2021-22-ஆம் கல்வியாண்டில் 01.01.2022 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு/பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் 31.12.2002 வரை நேரடி நியமனம்/பதவி உயர்வு/அலகு விட்டு அலகு மாறுதல்/ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் சார்ந்து விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல்வெளியிடப்பட்டு பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு /பணி மாறுதல் பெற தகுதி படைத்தவ...