Flash News

    Loading......

நீங்கள் 18 வயது நிரம்பியவரா? உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்


வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் பெயர் நீக்கம் செய்திடவும் வருகின்ற நவம்பர் 13.11.2021 14.11.2021 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது இதில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள், தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம் (6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும், ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என உறவுகள், தம்பிகள் சரி பார்த்துக் கொள்ளவும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். 
பெயர் சேர்க்க, நீக்கம், பிழை சரிசெய்ய கண்டிப்பாக கொண்டு செல்லவேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:- 
1) பள்ளி மாற்று சான்றிதழ்(TC) 
2) கல்வி சான்றிதழ் 
3) பள்ளியின் மதிப்பெண் சான்றிதழ் 
4) ஆதார் அட்டை 
5) ஒட்டுநர் உரிமம் 
6) பாஸ்போர்ட் 
7) மார்பளவு கொண்ட இரண்டு கலர் புகைப்படங்கள் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ)

கருத்துரையிடுக

0 கருத்துகள்