பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி ஆணையரால் வேளியிடப்பட்டுள்ளது. மேலும் பாட வாரியாகவும் மாவட்டங்களுக்கு ஒதுக்கடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ரூ.10000 மாத ஊதியம் வழங்கப்படும். 5 மாதங்கள் அவர்களுக்கு பணி வழங்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலமோ பதவி உயர்வின் மூலமோ நிரப்பப்படும் வரை எது முந்தயதோ அது வரை அவர்கள் பணியில் தொடரலாம்.
வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்க Download
அரசாணையை பதிவிறக்க Download
0 கருத்துகள்