முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை

 ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் பள்ளிகளில் ஜனவரி 10 வரை  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து அரசு கொரானா வழிகாட்டுதல் படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் விவரம் துணி மற்றும் நகைக்கடைக்கு 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 நபர்கள் மட்டுமே அனுமதி புத்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி இல்லை சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி. அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி ...

PGTRB - போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 PGTRB - முதுகலை ஆசிரியர் / கணினி பயிற்றுநர் நிலை - 1 / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுகள் இணைய வழிமூலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான கால அட்டவணை 15 நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.  அறிக்கையை பதிவிறக்க DOWNLOAD

பொது மாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் (Word Format)

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் பதிவிறக்க  DOWNLOAD DSE Transfer Application Word  Format  DOWNLOAD DEE Transfer Application Word  Format   DOWNLOAD Unit Transfer Application pdf Format   DOWNLOAD Spouse Certificate Word  Format   DOWNLOAD DSE Mutual Transfer Application  DOWNLOAD

2021-22 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்களுக்கான  2021-22 ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 31.12.2021 முதல் 07.01.2022 வரை ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 10.01.2022 திங்கட்கிழமை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். 11.01.2022 செவ்வாய்க்கிழமை முன்னுரிமைப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம். 13.01.2022  வியாழக்கிழமை இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும். 19.01.2022 முதல் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்கவுள்ளது. அட்டவணையை பதிவிறக்க  DOWNLOAD அரசாணையை பதிவிறக்க DOWNLOAD

Income Tax FY_2021-22 Updated Form Download

 2021-22 நிதி ஆண்டிற்கான வருமா வரி கண்க்கீடு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளவும். Entry Page இல் தங்களின் விவரங்களை பச்சை வண்ண செல்களில் உள்ளிடவும். DOWNLOAD படிவத்தில் ஏதேனும் மாறுதல்கள் தேவைப்படின் விவரங்களை இந்த முகவரிக்கு தெரியப்படுத்தவும். gurookulam.com@gmail.com

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி தி.மலை மு.க.அலுவலர் செயல்முறைகள்

 2021-22-ஆம் கல்வியாண்டில் 01.01.2022 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு/பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப்  பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் 31.12.2002 வரை நேரடி நியமனம்/பதவி உயர்வு/அலகு விட்டு அலகு மாறுதல்/ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் சார்ந்து விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின்  தற்காலிக முன்னுரிமைப் பட்டியல்வெளியிடப்பட்டு பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு /பணி மாறுதல் பெற தகுதி படைத்தவ...

12 Botany and Bio-Botany Latest Study Material and Practical Guide

  Click here

Higher Sec Headmaster Promotion Counselling on 30.12.2021 Announced by JD (HSS)

  11.11.2019 அன்று நடைபெற்ற மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்குப் பிந்தைய காலிப் பணியிடங்களுக்கு 01.01.2019 நிலவரப்படியான தெரிவு செய்யப்பட்ட 62 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 37 உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.2021 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் EMIS இணையம் மூலம் நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) அவர்கள் தெரிவித்துள்ளார். சுழற்சிப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்களின் EMIS எண்ணையும் w1dsetn@gmail.com எனற் முகவரிக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். சுழற்சிப் பட்டியலை பதிவிறக்க    DOWNLOAD

அகவிலைப் படி 17% லிருந்து 31% மாக உயர்வு ! சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ . 3000 பொங்கல் போனஸ்

 அரசு ஊழிர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படி ஜனவரி 2022 முதல் 31% மாக உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ . 3000 பொங்கல் போனஸா க அறிவித்துள்ளது. தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ . 1000 கருணைத் தொகை வழங்கப்படும். ஓய்வுதியதாரர்களுக்கு ரூ . 500 கருணைத் தொகைவழங்கப்படும் எனவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாட்டின் வழிகாட்டு நெறிமுறைகள்

 பள்ளியில் செயல்படும் மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் வரம்புகள் பற்றி விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் நெறிமுறைகள் மாநில திட்ட இயக்குநரால்  வெளியிடப்பட்டுள்ளன. வழுகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்க  Download

வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு

வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு பணிமூப்புப் பட்டியல்     DOWNLOAD காலிப்பணியிடம்               DOWNLOAD

நாளை 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH (கிருஸ்துமஸ் நோன்பு) எடுக்கலாமா?

*நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.*  நாளை RH எடுப்பவர்கள்,  அரசு இரண்டாம் பருவ விடுமுறை டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அறிவித்திருந்தாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு ( F.R   annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (c.l and R.H) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு. 24.12.2021  வரையறுக்கப்பட்ட விடுப்பு RH 25.12.21 முதல் 02.01.22 அரையாண்டு விடுமுறை  மொத்தம்  10 நாட்கள் நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 இல் பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்).  தகவல் அளித்தவர்கள் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021  நன்றி

டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாண்புமிகு அமைச்சர் அன்பில் பொய்யாமொழி

 டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நெல்லையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

10 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரேங்க் அட்டை எளிதாக தயாரிப்பதற்கான படிவம்

உங்கள் வகுப்பின் தர வரிசைப் பட்டியலை மிக எளிதாக தயாரிப்பதற்கான எக்செல் படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு எண் , மாணவர் பெயர், மதிப்பெண்கள் விவரம் உள்ளீடு செய்தால் மொத்த மதிப்பெண், தரம், பாட வாரியாக மொத்த மதிப்பெண், சராசரி, தேர்ச்சி விவரம் போன்வற்றை தெரிந்துகொள்ளலாம். இதனை தயாரித்த திருவாளர்  P.THIRUNAVUKKARASU,B.E.,M.Tech., Engineering Insturctor,Ghss,Thiruneipair,Thiruvaurur (Dt) அவர்களுக்கு குருகுலம் மற்றும் கல்விகுரு இணையக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். Form DOWNLOAD

ஆசிரியர்கள் கண்ணியமும் கலாச்சாரமுடைய நாகரீக உடை அணிவது அவசியம் - பள்ளிக் கல்வி இயக்குநர்

 மாணவ மாணவிகளுக்கு நல்லதோர் முன்னுதாரணமாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் அசிரியர்கள் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிலன் அளிந்து வரும் முறையில் தமது பதவிக்குரிய கடணடிணயமும், நமது கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த நாகரீகமும் இருத்தல் அவசியம் என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் 29-06-2012 அன்றைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையை பதிவிறக்க  Download

மாவட்ட வாரியாக ஆய்வு அலுவலர்கள் நியமனம் - பள்ளிக் கல்வி ஆணையர்

 அனைத்து பள்ளிகளையும் ஆய்வு மேற்கொள்ள இணை இயக்குநர்கள் தலைமையில் ஆய்வுக்குழு மற்றும் மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து பள்ளிக்கவ்லி ஆணையர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். மாவட்டம் வாரியாக ஆய்வு அலுவலர் நியமனப் பட்டியல் பதிவிறக்க DOWNLOAD

8 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு இனி கட்டாய இடமாறுதல் - பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

 கலந்தாய்வு மாறுதல் அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெனியீடு இனி புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்து  8 ஆண்டுகள் தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு கட்டாய இட மாறுதல்  அவசரத் தேவை எனில் நிருவாக மாறுதல் செய்யலாம். பணி நிரவல் 1. இந்த ஆண்டு பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யக்கூடாது முன்னுரிமை விவரம் 1. 100% கண்பார்வையற்றவர் 2. 40% மேல் உடல் ஊனமுற்றோர் 3. உடல் ஊனமுற்ற , மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை உடைய ஆசிரியர்கள் 4. இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிஸ் செய்ய வேண்டியவர்கள், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு முன்னுரிமை  5. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவிகள்  6. 40 வயது மேலான முதிர் கன்னியர் 7. 30 கி.மீ க்கு மேல் பணியாற்றும் கணவன்/மனைவி விண்ணப்பிக்கும் முறை 1. முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழை உடனயாக பெற்று தயார் வைத்திருக்கவும். 2. ENIS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும் . 3. மாவட்டத்திற்குள்/வேறு மாவட்டத்திற்கு ஒரே ஒரு விண்ணப்பத்திலேயே விண்ணப்பிக...

2 ஆண்டுகளுக்கு குறைவாக ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மாறுதல் பெற இயலாது - கலந்தாய்வு அரசாணை வெளியீடு

 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை  இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்வுகள் தவிர்த்து மற்றவர்களுக்கு 2 ஆண்டுகளுக்குக் குறைவாக பணிபுரிந்திருந்தால் அவர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள இனங்களில் உள்ளவர்களுக்கு 2 ஆண்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசாணையை பதிவிறக்க    Download இதே விதிமுறைகள் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதலுக்கும் இருக்கலாம் என தெரிய வருகிறது.

சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு

சமக்ர சிக்சா - தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள் பதிவிறக்கவும் Downoad

பாதுகாப்பு பெட்டி மாற்றம் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவிப்பு

 மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் படி, பாதுகாப்பு பெட்டி (safety box)&விழிப்புணர்வு நெகிழி (awareness flex board) -பள்ளிகளில் வைத்து  அதனைEMIS -ல் பதிவு செய்ய ஏற்கனவே சொல்லபட்டது. இதில் awareness flex board-மாற்றங்கள் செய்யப்பட உள்ளதால், Revised awareness flex board- Image வரும்வரை , இப்போதைய பலகை பயன்படுத்த வேண்டாம் தயாரிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. Proceed நன்றி

மாற்றுத்திறனாளிகள், மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மாற்றுத்திறனாளிகள், மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் மற்றும் NMMS இல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம்   Home - National Scholarship Portal (scholarships.gov.in)  விண்ணப்பிக்க நாளை 15-12-2021 கடைசி நாளாகும். இதுவரையில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அதனை செய்து முடிக்கவும். மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது. 

அரசு ஊழியர் கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அரசு ஊழியர் கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள செயலர் பதவியானது நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் Co-Operative Training & Knowledge in Computer Application கூடுதலாக பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கை பதிவிறக்க Download

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் சார்பாக தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று

  01/01/2021 நிலவரப்படியான உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் பள்ளிக் கல்வி ஆணையரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை சம்பந்தப்பட்ட தலைமைஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்களுக்கும் அனுப்பி சரிபார்த்து சேர்க்கை  / திருத்தம் / நீக்கம் ஏதேனும் இருப்பின் உரிய படிவத்தில் நிறைவு செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தலைமைஆசிரியரின் சான்றுடன் சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் Download பட்டியலை பதிவிறக்க  Download

12 ஆம் வகுப்பு தாவரவியல் தமிழ்வழி ஒரு மதிப்பெண் இணைய வழித் தேர்வு

  12 தாவரவியல் Loading…

11 ஆம் வகுப்பு தாவரவியல் அலகு - 1 மாதிரி வினாத்தாள்

  11 ஆம் வகுப்பு தாவரவியல்  அலகு - 1 பாடத்திற்கு மாதிரி வினாத்தாள் DOWNLOAD

10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு - அட்டவணை வெளியீடு

10 மற்றும் 12 ஆம் திருப்புதல் தேர்வு அட்டவணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வெளியிடப்பட்டுள்ளது. 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி 21-12-2021 இல் முடிவடைகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறுகிறது.  தேர்வுக்கால அட்டவணையை பதிவிறக்க   Download பாடதிட்டத்தினை பதிவிறக்க   Download

உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் உங்கள் பெயர் உள்ளதா?

 01-01-2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர்த்தல் , நீக்கல் தேவைப்படின் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார். பட்டியலை பதிவிறக்க Download தலைமைஆசிரியர்கள் வழங்க வேண்டிய படிவம் & சான்று  ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் Download

உதவித் தலைமைஆசிரியர் நியமனம் - வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 உதவித் தலைமைஆசிரியர் நியமனத்திற்கான விதிகள் அவர்தம் பணிகள் பற்றி வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க அங்கே சொடுக்கவும். Download

EMIS இணையதளத்தில் 10 & 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை Update செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

EMIS இணையதளத்தில் பொதுத் தேர்வு எழுதும் 10 & 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை Update செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-12-2021 வரை இணையதளத்தில் Update செய்யலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே 04-12-2021 வரை Update செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறு மற்றும் மழை காரணமாக Update செய்ய இணலாததால் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை இயக்குநரின் கடித நகல் பதிவிறக்க கீழே கிளில் செய்யவும். Download

ஊரக திறனாய்வுத் தேர்விற்கு தலைமைஆசிரியர்கள் பள்ளி அளவில் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் . Also Application Download

ஊரக திறனாய்வுத் (Trust Exam) தேர்வு 30-01-2022 அன்று நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணாக்கரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ 100000 க்கு மிகாமல் இருக்கவேண்டும். 06-12-2021 முதல் 14-12-2021 க்குள் தலைமைஆசிரியர்கள் அரசு   தேர்வுகள் துறை இயக்ககம்   இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் கொடுத்து பூர்த்தி செய்து 14.12.2021 க்குள் பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் வருமானச்சான்றும் இணைக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணம் மாணவர் ஒருவருக்கு ரூ 10 வீதம் வசூலித்து ONLINE வழியாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைஆசிரியர்கள் விண்ணப்பத்தினை பெற்று இணையத்தில் 09-12-2021 முதல் 20-12-2021 க்கும் இணைள தளம் வழியாக பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID & Password பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டும். தேர்வுக் கட்டணத்தை  ONLINE வழியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. SCH...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்க்கு இம்மாதம் திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்க்கு இம்மாதம் அரையாண்டுத்த் தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  இயல்பாக பள்ளி திறக்கப்ட்டிருந்தால் இம்மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பெறவேண்டும். ஆனால் கொரனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால்  அரையாண்டுத்த் தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாடதிட்டத்தினை பதிவிறக்க  Download

e-PAN Card Download செய்வது எப்படி?

  இந்திய மக்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவது, வருமான வரித் தாக்கல் செய்வது, பணப் பரிவர்த்தனைகள் என பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு மிக அவசியமான ஆவணமாக உள்ளது. பான் கார்டு திடீரென தொலைந்துவிட்டால் சில அத்தியாவசிய பணிகளை முடிப்பதே பெரிய சிரமமாகிவிடும். இதுபோல நீங்களும் பான் கார்டு தொலைத்துவிட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். ஆதார் கார்டினை நாமே Download செய்வது போல்  e-PAN Card னை நாமே Download செய்து கொள்ளலாம். வெறும் 10 நிமிடங்களில் நீங்கள் PAN கார்டு வாங்கிவிடலாம். இ-பான் கார்டு (e-PAN card) எனப்படும் டிஜிட்டல் கார்டை சில நிமிடங்களிலேயே டவுன்லோடு செய்துவிடலாம்.  அதனை எவ்வாறு எளிமையாக பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். முதலில் NSDL இணையதளத்திற்கு இ-பான் கார்டு பிரிவுக்கு செல்லவும். அதற்கு இந்த e-PAN Card Download இணைப்பை கிளிக் செய்யவும். 1. அதில் download e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும் . 2. உங்கள் பான் எண்ணை பதிவிடவும் 3. பின்னர் ஆதார் எண்ணை பதிவிடவும் 4. பிறந்த தேதியை பதிவிடவும் 5. உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப...

SC/ST மாணவர்கள் இணையவழியில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க Scholarship Help desk அமைக்க உத்தரவு

  202 1 -202 2  ஆம் கல்வியாண்டி ற்கான இணையதளம் விரைவில் திறக்கப்படவுள்ளதால், பள்ளி/கல்லூரிகளில் பயிலும்  ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்க ள்  இணையவழியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடவும், கல்வி உதவித்தொகை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க ஏதுவாக பள்ளி/கல்லூரிகளில்  Facilitation centre / Scholarship Help desk என்ற அமைப்பினை கட்டாயம் உருவாக்கி அதற்கு உரிய அலுவலரை நியமித்து அவ்விவரத்தினை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு 13.12.2021க்குள் தெரிவிக்க வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் சேர்க்கை பெறும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெற்றிருப்பின், அப்பாடப்பிரிவுகளுக்கு சுயநதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை  அம்மாணவர்கள் கல்லூரிக்கு செலுத் துவதிலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது. ஒன்ற...

தமிழக அரசு வேலை வாய்ப்பிற்கு தமிழ் தேர்வு கட்டாயம் - தமிழக அரசாணை வெளியீடு

  தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.  கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையை பதிவிறக்க  Download

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை

 மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை Download

May 2021 Departmental Exam Results published on 02-12-2021 for All Departments

 May 2021 Departmental Exam Results published on 26.10.2021 for Various Departments Results Published on 02-12-2021 Results Published All TEST Codes Results Published on 18-11-2021 Results Published TEST Codes 18,20,21,23,24,27,29,30 to 36, 42 to 48, 52, 58, 62, 64, 70, 71, 74, 76, 103, 105, 109, 111,112, 115, 116, 120, 123, 133, 134, 137, 143, 144, 147, 154, 155, 156, 157, 161, 164, 166, 167, 169, 171 Results Published TEST Codes  1,3,4,5,6,9,11 to 16,49,53,54,59,60,63,67,75,102,104,106,108,114,119, 121, 125,126,127,130,131,132,135,138 to 142,146,148,149,150,151,153,158,159,160,162,163,165, 168,170,175,176,179 Following department results published 1. Animal Husbandary Departmental  2. Economics and Statetics department 3. Fire service department 4. Fisheries Department 5. Forest Department 6. HR & CE Department 7. Highways Department 8. Industries and Commerce Department 9. Khadi & Village Industries Department 10. LFAD Department 11. Labour and Factories Depar...

2014 ஆம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பு

  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து , தங்கள் பதிவினை 2014 முதல் புதுப்பிக்கத் தவறிய சுமார் 48 இலட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017,2018, மற்றம் 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு  ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை  நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலம் 3 மதங்களுக்கு நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அரசாணையை பதிவிறக்க   Download

Senior-Junior பணிவரன்முறை ஒரே நாளாக இருந்தாலும் ஊதிய முரண்பாட்டினை அடிப்படை விதி 22(B) இன் படி அனுமதிக்கலாம்- CM Cell Reply

  பணியில் மூத்தோர்-இளையோர்   பணியில் சேர்ந்த நாள் அல்லது பணிவரன்முறை நாள் ஒரே நாளாக இருந்தாலும் அடிப்படை விதி 22(B) இன் படி நடவடிக்கை எடுக்கலாம் என முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரப்பட்டுள்ள தகவலுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. Download CM Cell Reply Letter

Hall Ticket Released for Polytechnic Professor Exam by TRB - Now Downloaded

 08-12-2021 முதல் 12-12-2021 வரை நடைபெறவுள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுக் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.கீழ்க் கண்டுள்ள விவரப்படி தங்களின் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.   The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 01.12.2021 evening onwards in the following steps.               To familiarize with Computer based examination Practice test / Mock test is also available.               Step 1 – Click Login               Step 2 – Enter User ID and password               Step 3 – Click Dashboard       ...

PTA மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிட விவரம்

  திருப்பத்தூர் மாவட்டத்தில் PTA மூலம் நிரப்பப்பட உள்ள முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் பள்ளி வாரியாகவும் பாட வாரியாகவும் பெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும். Download

Minority Scholarship (National Schalorship Portal) Apply Date Extened

  பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற nsp 2.0 portal-லில்  விண்ணப்பிக்க கால அவகாசம் 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 30-11-2021 என இருந்த நிலையில் தற்போது 15-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் fresh & renewal விண்ணப்பங்களை பள்ளியின் Nodal officer verify செய்ய 31-12-2021 கடைசி நாள். இதற்கு முன் 15-12-2021 என இருந்தது. இதுவரை பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத பள்ளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். உடல் ஊனமுற்றோர், மன நலம் பாதிக்கப்பட்ட மாணாக்கர் (IED Children) ஆகியோர்க்கும் இதில் விண்ணப்பிக்கலாம். National Scholarship Portal