33 வருடப் பணி அல்லது 58 வயதில் ஓய்வு..? ஓர் அலசல் அரசு வேலையில் 33 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு 58 வயதில் பணி ஓய்வு, மற்றவர்களுக்கு 60 வயதில் பணி ஓய்வு என்கிற செய்தி தமிழக அரசு ஊழியர்களிடையே நன்கு பதிவாகியுள்ளது. ஆனால், இது என்ன கணக்கு என்கிற கேள்விக்கான பதில் பலருக்கும் தெரிவதில்லை. ஓய்வு தேதியில் மாற்றம் இருக்குமா? . தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையில், ‘‘31.05.2020 அன்று யாரெல்லாம் ஓய்வு பெற இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் தமது 60 வயது வரை பணியில் இருப்பார்கள்’’ என்று இருப்பதால், மேல் நிலைப் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் 31.05.2022 அன்றுதான் ஓய்வு பெறுவார்களே தவிர, அதற்குமுன் ஓய்வு பெற மாட்டார்கள். மேற்கண்ட ஆணைப்படி, 01.06.1962 வரை பிறந்த தேதியைக் கொண்ட அனைவரும் 31.05.2022 அன்று பிற்பகல் ஓய்வு பெற்றுவிடுவார்கள். அதாவது, ஓர் ஊழியர் 20.05.1962 அன்று பிறந்ததாக அவரது பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர் தனது 60-வது வயதை 19.05.2022 அன்று நிறைவு செய்திருப்பார். எனவே, 19.05.2022 பிற்பகல் இவர் ஓய்வு பெற வேண்டும். ஆனால், ஓர் ஊழியர் ஓய்வு பெற வேண்டிய தேதி, மாதத்த...