Flash News

9/recent/ticker-posts

மின்சாரத் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மின்துறை அமைச்சர்


மின்சாரத் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மின் துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 150 இடங்களில் மக்கள் சபை கூட்டம் நடந்தது. இந்த மக்கள் சபை கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.இதில் 6 வார்டுகளில் மட்டும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உள்ளது.

கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்தாதவது. பெரும்பாலான மனுக்களில் முதியோர் உதவித்தொகை பெற கோரிக்கை வருகிறது. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை முதல்வர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். முதல்வர் பொறுப்பேற்ற கொண்டதற்கு பிறகு ஐந்து மாதங்களில் வழங்கப்பட்டுள்ள 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். 

அதனைப்போலவே வாக்குறுதியில் குறிப்பிட்ட மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு திட்டமும் தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.மின்சாரத் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்