202 1 -202 2 ஆம் கல்வியாண்டி ற்கான இணையதளம் விரைவில் திறக்கப்படவுள்ளதால், பள்ளி/கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்க ள் இணையவழியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடவும், கல்வி உதவித்தொகை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க ஏதுவாக பள்ளி/கல்லூரிகளில் Facilitation centre / Scholarship Help desk என்ற அமைப்பினை கட்டாயம் உருவாக்கி அதற்கு உரிய அலுவலரை நியமித்து அவ்விவரத்தினை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு 13.12.2021க்குள் தெரிவிக்க வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் சேர்க்கை பெறும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெற்றிருப்பின், அப்பாடப்பிரிவுகளுக்கு சுயநதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை அம்மாணவர்கள் கல்லூரிக்கு செலுத் துவதிலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது. ஒன்ற...