முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம்

 வேலூர் மாவட்டத்திற்கு 01-08-2021 நிலவரப்படி தேவைப்படும் பள்ளிக்கு கூடுதலாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரம் ( பள்ளி மற்றும் பாட வாரியாக) Download

இ- சேவை மையங்களில் 23 வகையான கல்விச் சான்றிதழ்களை பெறலாம் - அரசாணை வெளியீடு

 அரசு கேபிள் டிவி மையங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இ-சேவை மையங்களில் கல்வித் துறை சம்பந்தமான 23 வகை யான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. Download

School Administrative Officer Paper 1 & 2, Account Test -I and Office Manual Test Results e-Bulletin Published

 கல்வித்துறையின் முக்கியமான துறைத்தேர்வு பாடங்களான பள்ளி அலுவலக மேலாண்மை தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றின் மே 2021 தேர்வுக்கான முடிவுகள் அடங்கிய  e-Bulletin தற்போது வெளியிடப்பட்டுள்ளது. e-Bulletin பதிவிறக்க Download TEST CODE 065 START PAGE NO 876    School Administrative Officer Paper 1 TEST CODE 072 START PAGE 1556    School Administrative Officer Paper 2 TEST CODE 124   START PAGE No 2289    Account Test -I TEST CODE 172 START PAGE No 266   Tamilnadu  Office Manual Test

குறுவள மைய தலைமைஆசிரியரின் பணிகள் - பொறுப்புகளும் கடமைகளும் - மாநில திட்ட இயக்குநர்

 உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளை குறுவள மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அருகாமையிலுள்ள  தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளை உள்ளடக்கி மொத்தம்  18 க்கும் மிகாமல் குறுவள மையம் அமைத்து குறு வள மைய ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடம் மாற்றியமைத்து பணியமர்த்தப்பட்டுளளனர். குறுவள மைய தலைமைஆசிரியர்களின் பணிகள் - பொறுப்புகளும் கடமைகளும் என்னென்ன எனபதை மாநில திட்ட இயக்குநர் அவர்கள் அறிவித்துளளார். மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பதவிறக்க Download

மேனிலைத் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்தோர் சுழற்சிப் பட்டியல் வெளியீடு

 27-01-2022 இன்று நடைபெறவுள்ள மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதி வாய்ந்தோர் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் ஆகியோர் அடங்கிய சுழற்சிப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க Download சுழற்சிப் பட்டியல் பதிவிறக்க Download

மாறுதல் கலந்தாய்வு-Spouse Priority இல் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்-பள்ளிக் கல்வி ஆணையரின் திருத்திய அறிக்கை

தற்போது நடைபெறும் கலந்தாய்வில் Spouse Pririty யில் முன்னுரிமை கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன்/மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும் என ஏற்கனவே இருந்த நடைமுறையை மாற்றி எந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளை வேண்டுமானாலும் தெரிவு செய்துகொள்ள அனுமதியளித்துபள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த பின்னர் 3 ஆண்டுகளுக்கு Spouse Periority முன்னுரிமை கோர இயலாது எனவு உத்தரவிடப்பட்டுள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களது சுழற்சி வரும்பொழுது உள்ள காலிப்பணியிடத்தினை மட்டுமே தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தெரிவு செய்ய அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் முறையீடுகள் அல்லது ஆட்சேபனை இருப்பின் அதனை EMIS இணையதளத்தில் 25-01-2022 மாலை 8.00 வரை தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் திருத்திய செயல்முறைகள் ப...

12 ஆம் வகுப்பு அடிப்படை மின்பொறியியல் கல்வி தொலைக்காட்சி விடியோக்கள்

Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 1   Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 2 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 3 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்பகிர்மானமும் விநியோகமும்| பகுதி 4 Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 1 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 2 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 3 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 4 | Kalvi Tv Class 12 | வகுப்பு 12 | மின் பொறியியல் | ஒளியூட்டம் | அலகு 2 | பகுதி 5 | KalviTv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின்வெப்ப சாதனங்கள் | அலகு 3 | பகுதி 1 | KalviTv Class 12 | வகுப்பு 12 | அடிப்படை மின் பொறியியல் | மின் வெப்ப சாதனங்...

PG Regularization Order released

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2018-19 மற்றும்2019-2020 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் 2020 பணியமர்த்தப்பட்டனர் இந்த முதுகலை ஆசிரியர்களின் நியமனத்தை பணிவரன்முறை செய்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்(மேனிலைக் கல்வி) அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநரின் செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

மகிழ் கணிதம் ஆசிரியர்கள் பயிற்சிக்கான நெறிமுறைகள் மற்றும் பயிற்சி விடியோக்கள்

மகிழ் கணித பயிற்சிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் https://youtu.be/1zXb9TFNlm4 பயிற்சி அட்டவணை https://youtu.be/Y058lWkUd_k முதல் நாள் பயிற்சி விடியோக்கள் விடியோ - 1 https://youtu.be/Rs0sUay_s2w விடியோ - 2 https://youtu.be/HAyh3Gg7v5A விடியோ - 3 https://youtu.be/NyAzXTVfqP4 விடியோ - 4 https://youtu.be/FkT6SYNb1H8 விடியோ - 5 https://youtu.be/KHG0SMhKgz4 விடியோ - 6 https://youtu.be/5gSqhqAg0F4 விடியோ - 7 https://youtu.be/-UK59KCAv2A

22.01.2022 சனிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

 கொரானா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு 19-01-2022 முதல் 31-01-2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 19-01-2022 முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இன்றி பள்ளி செயல்பட்டு வருவதால் வரும் சனிக்கிழமை 22.01.2022 அன்று ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவவர்கள் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.கஎண் 34462/பிடி1/இ1/2022 நாள் 20.01.2022

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிப்பு

 காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான 2021-22 ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் டாக்டர் பிஎஸ்.சீனுவாசன் நகராட்சி மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் நாள்  24-01-2022 முதல்  23-02-2022 வரை கரூர் மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் இடம் குறித்த கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்  01/ஆ1/2022  நாள்  .01.2022 சேரன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, வெண்ணைமலை

தேசிய திறனாய்வுத் தேர்வு (NTS Exam) பிப்ரவரி 5 தேதிக்கு தள்ளிவைப்பு

 கொரானா பரவல் காரணமாக தேசிய திறனாய்வுத் தேர்வு (NTS Exam) பிப்ரவரி 5 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தேர்வுகள் துறையின் அறிக்கையை பதிவிறக்க DOWNLOAD

10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31-01-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19-01-2022 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  பள்ளிக் கல்வி தேர்வுகள் துறை இணையத்தில் விண்ணப்பிக்க 19-01-2022 வரை இருந்ததை 31-01-2022 வரை நீட்டித்துள்ளது. அதேபோல் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் 31-01-2022 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படமாட்டாது எனவும் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. DGE தேர்வுகள் இயக்குநரின் அறிக்கை பதிவிக்க DGE

NTSE தேர்வு நுழைவுச் சீட்டு 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- தேர்வுத் துறை அறிவிப்பு

 தேசிய திறனாய்வுத் (NTSE) தேர்வு நுழைவுச் சீட்டு 19.01.2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நுழைவுச் சீட்டில் எதேனும் திருத்தம் இருப்பின் (பெயர், பிறந்த தேதி, புகைப்படம்) திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினைக் குறிப்பிட்டு பள்ளித் தலைமைஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று தேர்வு எழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு தேர்வுகள் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வு நாள் 29-01-2022 சனிக்கிழமை Notification DOWNLOAD Hall Ticket  DOWNLOAD

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

  பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31, என முன்னதாக அறிவிக்கப்பட்டு  இருந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வருமான வரி தாக்கல் ( ITR Filing ) செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும்,  மற்றும் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது. Income Tax Circular  

NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு

 2021-22 ஆம் ஆண்டிற்கான NMMS தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 05.03.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது NMMS Application  DOWNLOAD Notification DOWNLOAD

2021-22 ஆம் ஆண்டிற்கான மேனிலை தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தற்காலிக தெரிவு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு

 2021-22 ஆம் ஆண்டிற்கான மேனிலை தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தற்காலிக தெரிவு செய்யப்பட்டோர் பட்டியல் பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் 10.01.2022 நிலவரப்படி வெளியிடப்பட்டுளளது. முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலை பதிவிறக்க DOWNLOAD உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து மேனிலைப் பள்ளித் தலைமைஆசிரியர் பதவி உயர்வுக்கான தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலை பதிவிறக்க DOWNLOAD

முதுகலை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து ஆணை வெளியீடு

 2018-19 மற்றும் 2019-2020ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர்(மேனிலைக் கல்வி) அவர்கள் வெளியிட்டுள்ளார். DOWNLOAD

பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னரே மனமொத்த மாறுதல் மற்றும் அலகு மாறுதல் - பள்ளிக் கல்வி ஆணையர்

 பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னரே மனமொத்த மாறுதல் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறவேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 19-01-2022 முதல் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெவுள்ளது. அதநற்கு பின்னரே மனமொத்த மாறுதல் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறவேண்டும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்/ பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க DOWNLOAD

10-01-2022 திங்கள்கிழமை முதல் புதிய EMIS App இல் மட்டுமே வருகைப் பதிவு செய்யவேண்டும்.

 10-01-2022 திங்கள்கிழமை முதல் புதிய EMIS App இல் மட்டுமே வருகைப் பதிவு செய்யவேண்டும். பழைய EMIS App ஆனது திங்கள் முதல் வேலை செய்யாமல போகலாம். எனவே உடன் புதிய EMIS App பதிவிறக்கம் செய்து கொள்ளவும். DOWNLOAD ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி EMIS இணையதளத்தில்  ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம் பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும்  இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்  Fully not working என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது  Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெ...

ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை தலைமைஆசிரியர் எவ்வாறு Approve செய்வது?

ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை பள்ளி அளவில் EMIS இல் முதலில் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் சரிசெய்து Update செய்யவும். பின்னர் Login செய்து பதிவு செய்யவும். EMIS இல் மாறியிருப்பின் மாறுதல் விண்ணப்பத்திலும் அதேதான் தோன்றும். ஆகவே கவனமாக செயல்படவும். கீழ்க்காணும் EMIS இல் தனியரின் கணக்கில்  Login செய்து உள்ளே செல்லவும். அதில் My Profile click செய்து Teacher Transfer என்பதை click செய்யவும். கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவை சான்றிதழ்களை Upload செய்யவேண்டும். பின்னர் Submit Button click செய்யவும். EMIS LOGIN User ID என்பது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7 இலக்க எண் ஆகும் . 10 என ஆரம்பிக்கும். கடவுச்சொல் உங்களின் மொபைல் எண்ணில் முதல் 4 இலக்கம் உடன் @ மற்றும் பிறந்த நாளின் வருடத்தின் 4 இலக்க எண் ஆகும். Example User ID: 10058023 Password:  6599@1234 தலைமைஆசிரியர்கள் தங்களின் User ID (or) School IDயை Login செய்து ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Transfer Application Approval  click செய்து  Approve செய்ய வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர் ம...

Festival Advance Application Download

  விழா முன்பணம் பெறுவதந்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் DOWNLOAD     தலைமைஆசிரியர் செயல்முறைகள் மாதிரி படிவம் DOWNLOAD

அகவிலைப் படி 14% சதவீதத்திலிருந்து 31% சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

  அகவிலைப் படி 14% கசவீதத்திலிருந்து 31% சதவீதமாக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளிpயடப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2022 முதல் இந்த அகவிலைப் படி உயர்வு அமுலுக்கு வரும் அரசாணை எண் 3  நதி  நாள் 01-01-2022  பதிவிறக்க   DOWNLOAD

போனஸ் 2022 அரசாணை வெளியீடு

  சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் சிறப்பு மிகை ஊதியம் பெறுவதந்கான அரசாணை செளியிடப்பட்டுள்ளது. அரசாணை எண் 1 நாள் 01/01/2022    DOWNLOAD

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் அனுப்பக் கோரிய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்

 முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வி ஆணையர் கோரியுள்ளார். தற்காலிக தகுதி வாய்ந்தோர் பட்டியல்   DOWNLOAD விண்ணப்பப் படிவம்                DOWNLOAD பாடங்கள் வாரியாக செயல்முறைகள்  தமிழ்                     DOWNLOAD            ஆங்கிலம்      DOWNLOAD கணிதம்           DOWNLOAD இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல்       DOWNLOAD பொருளியல்      DOWNLOAD          வரலாறு                DOWNLOAD உடற்கல்வி இயக்குநர் நிலை-1           DOWNLOAD

தேர்வு இணையதளத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்ய தேர்வுகள் துறை அறிவுறுத்தல்

  2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர் விவரங்களை தேர்வுகள் இணையதளத்தில்  Log In - Admin (tndge.org)  பதிவு செய்ய அறிவுறுத்தியிருக்கின்றார் . இதனை 19-01-2022 க்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வுகள் துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் மற்றும் இணையத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் பதிவிறக்க      DOWNLOAD DGE SCHOOL LOGIN

9 to 12 std Quiz Exam at School Hi-Tech Lab Time Table

 9 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியின் Hi-Tech கணினி ஆய்வகத்தில் தினம் தோறும் 30 நிமிடங்கள் Quiz தேர்வு நடத்தப்பெறுவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான கால அட்டவணையை பதிவிறக்க  DOWNLOAD 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான கால அட்டவணையை பதிவிறக்க   DOWNLOAD