5 பவுனுக்குக் குறைவான நகைக் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது
நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதி வாய்ந்தோர் விவரம்
1. கூட்டுறவு சங்கங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கும் குறைவாக 31.03.2021 க்குள் நகைக் கடன் பெற்றோர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்கள்
2. பகுதியாக செலுத்தப்பட்ட தொகை போக மீதம் உள்ள தொகை மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியான தொகையாகும்.
3. ஒரு நபர் அல்லது ஒரு குடும்பத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் சேர்த்து 40 கிராமிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
4. குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரம் மிகச்சரியாக கொடுப்பவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்களாவர்.
5. மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்ட மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.
6. குடும்ப ஓய்வூதிய தாரர் மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்டிருந்தால் அவர்களக்கும் இது பொருந்தும்.
7. தற்போது வரை செல்லுபடியாகக் கூடிய குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தகுதி பெற்றவர்களாவர்.
8. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கன் அவர்தம் உறவினர்கள் பெற்ற கடன்களுக்கு தள்ளுபடி கிடையாது.
9. குடும்ப அட்டையில் NPHH என்று இருந்தால் அவர்கள் பெற்ற கடன்களுக்கும் தள்ளுபடி கிடையாது.
0 கருத்துகள்