முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நாட்டு வைத்தியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கறியை விட காய்கறி ஏன் சிறந்தது?

Title of the document   உயர் ரத்த அழுத்த த்தைக் குறைக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து வர வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் இஞ்சி யை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டுக் கொண்டு வர வலி நீங்கும். அல்லது இஞ்சியை நறுக்கி நேரடியாகவே வலி இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொண்டாலும் வலி வீக்கம் குறையும். பப்பாளி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி போன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடிச் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும் . வெங்காய த்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட தொண்டை வலி குறையும். பாலில் வெங்காயம், பூண்டு போட்டு வேகவிட்டு அந்தப் பாலை பருகி வர நெஞ்சில் சேர்ந்துள்ள சளி வெளியேறும் . பீட்ரூட் டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். அதுபோன்று ரத்தசோகை நோய் வருவதை யும் தடுக்கும். பாகற்காயை மதிய உணவில் அடிக்கடிச் சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் தொடர்பான நோய்கள் குணமாக்கும். தினமும் 1 கப் பசலைக் கீரை யை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கலி ல் இருந்து விடுபடலாம். ரத்தம் விருத்தியாக பொன்னாங்க...

எத்தனை முறை பாம்பு கடித்தாலும் இந்தச் செடி இருந்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம்

Title of the document   100 தடவை பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள் பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு.  என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள்.  நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை. பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு  (டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன. ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தா...

உணவே மருந்து

இது பல ஊடகங்களில் வந்த தொகுப்பாகும். இதனை நடைமுறையில் பயன்படுத்ததுவதனால் ஏற்படும் நேர்மறையற்ற தாக்கங்களுக்கு நாங்கள் ொறுப்பல்ல வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் ? தினமும் காலையில் எழுந்தவுடன் , வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும் . அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம் . 1.        இளஞ்சூடான நீர் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும் . கழிவுகள் வெளியேறும் . நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் . சருமம் இளமையாகும் . புத்துணர்வு கிடைக்கும் . செரிமானம் சீராகும் . மலச்சிக்கலைச் சரிசெய்யும் . 2.        வெந்தயம் நீர்   வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம் . வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து , ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்...