முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் - உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Title of the document


அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில்தான்  பதவி உயர்வு வழங்க வேண்டும் . இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தற்போது அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்றும் உறுதி செய்துள்ளது.

போட்டித் தேர்வின் அடிப்படையில் டிஆர்பி மற்றும் டிஎன்பிஎஸ்சி  போன்ற தேர்வு முகமைகள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு மதிப்பெண் அடிப்படையில்தான் இல்லாமல் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே முதுநிலைப் பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையட்ீ டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. பின்னர். கடந்த 2016ம் ஆண்டு புதியதாக சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள் ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமேயல்லாமல், இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக் கூடாது’ என்று கடந்த 2019ல் தீர்ப்பளித்தனர்.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது. பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர், உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு  வந்தபோது, ‘ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றுமின்றி, இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உச்சநீதிமன்றம் ஒரே தீர்வைதான் வழங்கியுள்ளது. எனவே, டி.ஆர்.பி மற்றும் டிஎன்பிஎஸ்சி நிருவாகம் வரும் 12 வாரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

EL Bill Preparation for Retired Employee in IFHRMS

www.kalviguru.com EL or Encashment of leave bill preparation process: Note : EL and UEL - ex - employee and Death Employee can able to process . Step 1: Ones not added nominee need to add nominee details: HRMS - Employee profile - enter ex employee I'd (11 digit) - go- click update - Below left side -Click Update family members details- Add contact- click government employee or non government employee - enter details - Review - submit - complete three level of process Step 2: Human resources-> Leave Process-> Encashment of leave -> Encashment of EL ->click EL nominee /UEL nominee - (Select employee type-Ex Employee-Click requry )enter Employee I'd -Go-Action-Create -Enter details-Review-Select Approval Group-Submit- 3 level pass Note : ( ones not showing nominee name Check - check nominee bank details added or not ) Step 3: HRMS- leave process- Encashment of EL/UEL of PA Encashment leave -Click Encashment of EL /click UEL of PA -Select Employee type -Ex-employee -r...

Important Forms

தமிழ்வழிச் சான்றுக்கான படிவம் TNPSC NO Objection Certificate DOWNLOAD     தற்செயல் விடுமுறை விண்ணப்பம்                  Download      தலைமைஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு விண்ணப்பம் Downlaod Medical Leave Form  Download      Doctor's Certificate for ML Download       Tax Challan to remit in Bank Download       Squad Duty Form Download      Spouse Certificate Word  Format   DOWNLOAD பணியாளருக்கு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஆணை பெறுவதற்கான படிவம் பதிவிறக்க   Download ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிமுடித்த ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறுவதற்கான விண்ணப்பம் Download மகிழுநது கடன் பெறுவதற்கான விண்ணப்பபடிவம் Download Important Form for to conduct Hr Sec Examination Download