Flash News

9/recent/ticker-posts

கொரோனாவால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை

 


கொரானா எனும் கொடிய நோய் உலக மக்களை பெரிதும் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது .அவ்வாறு கொரோனாவால் இறந்த, தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கருத்துரு அனுப்ப, அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த, அரசு ஊழியர்களின் வாரிசுதாரருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, இதற்கான கருத்துகளையும், அதற்கான ஆவணங்களையும் பெற்று ஆராய வேண்டும்.அதன்பின் உரிய கருத்துருவாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இது குறித்து, முதல்வர் அலுவலக செயலர் ஆய்வு செய்ய உள்ளார். எனவே, அனைத்து துறை அலுவலர்களும், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான கருத்துருக்களை அனுப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்