உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.
மூட்டு வலி இருப்பவர்கள் இஞ்சியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்து வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டுக் கொண்டு வர வலி நீங்கும். அல்லது இஞ்சியை நறுக்கி நேரடியாகவே வலி இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொண்டாலும் வலி வீக்கம் குறையும்.
பப்பாளி, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி போன்ற காய்கறிகளை உணவில் அடிக்கடிச் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட தொண்டை வலி குறையும்.
பாலில் வெங்காயம், பூண்டு போட்டு வேகவிட்டு அந்தப் பாலை பருகி வர நெஞ்சில் சேர்ந்துள்ள சளி வெளியேறும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். அதுபோன்று ரத்தசோகை நோய் வருவதை யும் தடுக்கும்.
பாகற்காயை மதிய உணவில் அடிக்கடிச் சேர்த்து வர, ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் தொடர்பான நோய்கள் குணமாக்கும்.
தினமும் 1 கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
ரத்தம் விருத்தியாக பொன்னாங்கண்ணிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்த வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து பயன்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கும் தன்மையும் வெள்ளரிக்கு உண்டு.
இளம் வயதிலேயே சிலருக்கு நரை வரக் காரணம், வைட்டமின் கே சத்து பற்றாகுறையே, பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய் போன்றவற்றில் வைட்டமின் கே சத்து அதிகளவிஸ் உள்ளதால், இந்தக் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மெல்ல மெல்ல இளநரை மறையும்.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் சக்தியும் வாழைத்தண்டில் உள்ளது
0 கருத்துகள்