Flash News

9/recent/ticker-posts

'சிப்' களுக்கு கடும் தட்டுப்பாடு, நமக்கென்ன என்று இருந்துவிட முடியாது. ஏன்?


 உலக அளவில் இன்று Semi-Conductors என்றழைக்கப்படும் Chip களுக்கு, பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கும், தைவானை சீனா உள் இழுக்க முற்படுவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது., செமி-கன்டக்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையை நீங்கள் தெரிந்துகொள்வதைத் தாண்டி அதன் பின்னணியை முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. ஏனென்றால், ஒரு பொருள் இன்று எப்படி உலகளாவிய தொடர்போடும், வணிகத்தோடும், அரசியல் உறவோடும் பிண்ணி பிணைந்திருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் இந்த Semi-Conductors 

Importants of Semi-Condutors

கணினி, கைபேசிகள் தயாரிக்க Semi-Conductors  இதயம் போன்றது. மேலும் 5G தொழில்நுட்பத்திற்கு இந்த Semi-Conductors மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சென்ற நூற்றாண்டில் பெட்ரோலிய பொருட்களின் தேவை எப்படி ஆட்டிப்படைத்ததோ அதுபோல் Semi-Conductors இந்த நூற்றாண்டில் ஆட்டிப்படைக்கும். உலகலாவிய அதிக தேவையான தயாரிப்பு இது. அதாவது, Semi-Conductors  தயாரிப்பில் முன்னிலை வகிப்பது அமெரிக்கா. கணிசமாகத் தயாரிப்பது சீனா. Semi-Conductors தயாரிப்பின் முக்கிய அம்சங்களான Intelectual Property (உலகலாவிய அறிவு சார் சொத்துரிமை) (உலகலாவிய அறிவு சார் சொத்துரிமை பற்றி விவரம் பின்னர் ஒரு பதிவில் தெரியப்படுத்துகிறோம்), வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை அமெரிக்காவிடம் உள்ளன. சிலிக்கான் வேஃபர்களைத் தயாரிப்பது ஜப்பான். அந்த சிலிக்கான் வேஃபர்களில் சர்க்யூட்டுகளைப் பதிக்கும் வேலையைச் செய்வது நெதர்லாந்து. யாருக்கு எவ்வளவு தேவை என்றாலும் எவ்வளவு சிறிது, பெரிது என்றாலும் தயாரித்துக்கொடுப்பதில் மிகத்திறமையான நாடு தைவான். இந்தத் துறையில் முன்னோடியான ‘Samsung’ நிறுவனத்தின் நவீன Semi-Conductors  தயாரிப்பு ஆலை இருப்பது தென் கொரியாவில். 

Semi-Conductors  தயாரிப்பில் அமெரிக்கா முதலிடம்

மிகக் குறைந்த விலையில் Semi-Conductors தயாரிப்பில் வெற்றி கண்ட சீனாவால், நவீன ரக சிப்புகளைத் தயாரிக்க முடியவில்லை. அதற்காக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் உள்ள சில நிறுவனங்களை வாங்க முயன்றபோது, அந்நாடுகள் விழிப்படைந்துவிட்டன. 5G  சாதனங்களுக்கு சிப்புகளைத் தயாரிப்பதில் சீனாவின் Huawei நிறுவனம் சாதித்திருந்தாலும்கூட, அந்த சிப்புக்கான வடிவமைப்புக்கு அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டி உள்ளது.

தன்னுடைய ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்தி, தங்கள் நாட்டு நிறுவனங்கள் Huawei நிறுவனத்துக்கு உதவிவிடாமல் 2019-ல் தடுத்துவிட்டது அமெரிக்கா. பிறகு தைவானின் ‘டிஎஸ்எம்சி’, தென் கொரியாவின் Samsung மற்றும் இதர வெளிநாடுகளையும் அமெரிக்க வடிவமைப்பு பயன்படுத்தப்பட்ட சிப்புகளை ‘Huawei’வுக்கு விற்கக் கூடாது என்று கட்டுப்படுத்திவிட்டது. சிப்புகள் தயாரிப்பில் தனக்குள்ள ஏகபோக உரிமையை அமெரிக்கா இப்படி நிலைநாட்டி வருகிறது.

இப்போது ஏன் இந்தத் தட்டுப்பாடு? 

Semi-Condutors உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி பெரிய அளவில் இருப்பதே தட்டுப்பாட்டுக்குக் காரணம். 2023 வரையில் இந்தத் தட்டுப்பாடு நீடிக்கும் என்றும் கணிக்கிறார்கள். கோவிட் ஊரடங்கின் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்தபடி பணியாற்றும் போக்கு தொடங்கியதும், கணினி - செல்பேசி பயன்பாடு தாறுமாறாக அதிகரித்தது. அதேவேளையில், இந்த செமி-கன்டக்டர் உள்பட எல்லா உற்பத்தி ஆலைகளும் ஊரடங்கின் விளைவாக, கணிசமான காலகட்டம் மூடப்பட்டன. ஆலைகள் திறக்கப்பட்டு, உற்பத்தி தொடங்கிய நிலையிலும் பாதிப்புகள். 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீசிய சூறாவளியில் ஏற்பட்ட சேதத்தால் Semi-Conductors உற்பத்தி அடியோடு நின்றது. ஜப்பானில் ஓர் ஆலையில் தீப்பிடித்ததால் அங்கும் உற்பத்தி நின்றது. இவையெல்லாம் மிகப் பெரிய நிறுவனங்கள். அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சீனாவுக்கு இந்த Semi-Conductors களை விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதிக்கும் முன்பே, இப்படி நேரலாம் என்று ஊகித்து ‘Huawei’ நிறுவனம் Semi-Conductors களை ஏராளமாக வாங்கிப் பதுக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து பிற நிறுவனங்களும் வாங்கிப் பதுக்கின.

இப்படி எல்லாமும் சேர்ந்து திடீர் தட்டுப்பாட்டை உருவாக்கிவிட்டன. விளைவாக,  உலகம் முழுவதும் Semi-Conductors  விலை பல மடங்கு அதிகரித்ததோடு இன்னமும் தட்டுப்பாடு நிலவுகிறது. சமாளிக்க உலக நாடுகளும், கார் நிறுவனங்கள் - செல்பேசி நிறுவனங்களும் தடுமாறுகின்றன. 

புதிய ஆலைகளைத் திறந்தால் என்ன?

Semi-Conductors தயாரிக்கும் ஆலைகளை இன்று திறந்து, நாளையே தயாரித்துவிட முடியாது. ஒரு மி.மீ. நீளம் கூட இல்லாத இந்த Semi-Conductors தயாரிப்பது நுட்பமான வேலை. சிலிக்கான் மீது அடுக்கடுக்காக ரசாயனங்களை அளவாக ஏற்றித்தான் தயாரிக்க வேண்டும். புதிதாகத் திறக்கப்படும் நிறுவனம், Semi-Conductors களைத் தயாரிக்க குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிடும். ஏற்கெனவே உள்ள நிறுவனங்களால் தயாரிப்பை அதிகப்படுத்த முடியுமே தவிர, ஒட்டுமொத்தத் தேவையையும் பூர்த்திசெய்துவிட முடியாது. அதனால்தான் குறைந்தபட்சம் 2023 வரையேனும் இந்தத் தட்டுப்பாடு நிலவும் என்கிறார்கள். 

உலகளாவிய முனைப்பு என்ன?

தென் கொரியா Semi-Conductors  தயாரிப்பை முன்னகர்த்துவதற்காக 451 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்தது. Semi-Conductors  தயாரிப்பு நிறுவனங்களுக்கு 52 பில்லியன் டாலர்கள் மானியம் தருவதாக அமெரிக்கா அறிவித்தது. 2030-க்குள் சிப் உற்பத்தியை மேலும் 20% அதிகரிக்க வேண்டிய ஏற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கியது. தைவானைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நீண்ட காலமாகக் காத்திருந்த சீனா இப்போது தைவானை வளைக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய தரவுகளைச் சேமிப்பதும், எல்லாப் பொருட்களிலுமே தரவுகளை உள்ளிடுவது வழக்கமாவதும் Semi-Conductors களுக்கான தேவையைத் தொடர்ந்தும் அதிகரிக்கத்தான் போகிறது. இத்தகு சூழலில், Semi-Conductors  உள்ளிட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் முக்கியமான இடத்தில் உள்ள தைவானை உள்ளே கொண்டு வருவது தன்னுடைய பொருளாதாரத்தையும், ஆளுகையையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறது சீனா.

சரி இதற்கு இந்தியா என்ன செய்கிறது?  

ஒரு பொருளுக்கு இப்படி உலகளாவியத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன் தேவை நம் நாட்டுக்கும் அதிகமாக இருக்கும்போது, ‘ஏன் அதை நாமே தயாரித்து தன்னிறைவு காணக் கூடாது?’ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. அப்படி ஒரு சிந்தனை இந்த விஷயத்திலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. “சிப்புகளைத் தயாரிப்பதால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவு, தயாரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதார வலிமை நம்மிடம் இல்லை என்பது போன்றவற்றைக் கருத்தில்கொண்டு இதை ஒதுக்கிவிடலாம்” என்று இதற்குப் பதில் சொல்கிறார் அஜய் ஸ்ரீவாஸ்தவா. Semi-Conductors களைத் தயாரிக்க தொடர் ஆராய்ச்சிகள் முக்கியம். தொடக்கக் காலத்தில் ஆண்டுக்கு 2,000 கோடி டாலர்கள் ஆராய்ச்சிக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும்பாலும் தோல்வியாகவே இருக்கும். இருபதாண்டுகள் முயற்சி செய்தும் சீனத்தால் பெரிய வெற்றி காண முடியவில்லை. எனவே பணம் வீணாவது குறித்து கவலைப்படாத நாடு மட்டுமே இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்