ஆசிரியர்கள் அசையா சொத்து விபரம்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு . அ. இலட்சுமிபதி அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் அவர்களம் 29/10/2021 அன்று பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்திக்க தலைமைச் செயலகம் சென்ற வந்ததாக தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் மாண்புமிகு கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளரை சந்தித்து ஆசிரியர்கனிள் அசையா சொத்து விவரம் பற்றி கலனத்தில் பரப்பப்படும் செய்தி குறித்த கருத்துகளை பின்வருமாறு தெரிவித்துளளார்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியூர் சென்றுவிட்டதால், அமைச்சரின் நேர்முக உதவியாளரை சந்தித்து (தமிழ்நாடு அரசின் நேர்முக உதவியாளர்) ஆசிரியர்கள் தனது அசையா சொத்து விபரங்களை அளிக்க வேண்டும் என்று அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று கேட்டபோது, அதுபோன்ற எந்த உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை என்றும் பழைய உத்தரவை யாரோ மாற்றி வாட்ஸ்-அப் குழுவில் வெளியிட்டதாகவும் , அந்த செய்தி உண்மையா என ஆராயாமல் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாகவும் ,சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியை தொடர்பு கொண்டு செய்தி ஒளிபரப்புவதை நிறுத்தியதாகவும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் அவர்கள் தொரிவித்தார்கள். எனவே இது போன்ற செய்திகளை ஆசிரியர்கள் நம்ப வேண்டாம் என்றும், தவறான செய்தியை வாட்ஸ்-அப் குழுவில் யாரும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இது சம்பந்தமாக ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவம் ஒன்றும் வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டு வருகிறது.
எனவே இத சம்பந்தமாக வாட்ஸ்-அப் குழுவில் யாரும் பரப்புரை செய்ய வேண்டாம் என்று மாநில அமைப்பு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆ.இலட்சுமிபதி
மாநிலத் தலைவர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
0 கருத்துகள்