Flash News

9/recent/ticker-posts

SC/ST மாணவர்கள் இணையவழியில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க Scholarship Help desk அமைக்க உத்தரவு

 


2021-202ஆம் கல்வியாண்டிற்கான இணையதளம் விரைவில் திறக்கப்படவுள்ளதால், பள்ளி/கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் இணையவழியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடவும், கல்வி உதவித்தொகை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க ஏதுவாக பள்ளி/கல்லூரிகளில் Facilitation centre / Scholarship Help desk என்ற அமைப்பினை கட்டாயம் உருவாக்கி அதற்கு உரிய அலுவலரை நியமித்து அவ்விவரத்தினை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு 13.12.2021க்குள் தெரிவிக்க வேண்டும்.

சுயநிதி கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் சேர்க்கை பெறும் ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெற்றிருப்பின், அப்பாடப்பிரிவுகளுக்கு சுயநதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை  அம்மாணவர்கள் கல்லூரிக்கு செலுத்துவதிலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் வழிகாட்டு   நெறிமுறை மற்றும் அரசாணைகளின் படி தகுதியுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வரை அம்மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம்  வசூலிக்க கூடாது எனவும், இப்பொருண்மையில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்கா வண்ணம் செயல்படவும், அனைத்து பள்ளி/கல்லூரி முதல்வர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது

               இக்கடிதத்தினை பள்ளி/கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இக்கடிதத்தை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயல்முறைகள் பதிவிறக்க  Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்