Flash News

9/recent/ticker-posts

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை

 ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் பள்ளிகளில் ஜனவரி 10 வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து அரசு கொரானா வழிகாட்டுதல் படி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் விவரம்

துணி மற்றும் நகைக்கடைக்கு 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 நபர்கள் மட்டுமே அனுமதி

புத்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி இல்லை

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்


திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி.


அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்


வழிபாட்டுத் தலங்களில் தற்போதைய நடைமுறையே தொடரும்


உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்