2021-22-ஆம் கல்வியாண்டில் 01.01.2022 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு/பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் 31.12.2002 வரை நேரடி நியமனம்/பதவி உயர்வு/அலகு விட்டு அலகு மாறுதல்/ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் சார்ந்து விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக முன்னுரிமைப் பட்டியல்வெளியிடப்பட்டு பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு /பணி மாறுதல் பெற தகுதி படைத்தவர்களின் பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 6462/சி1/இ1/2019 நாள் 09.11.2019ன்படி வெளியிடப்பட்டு இப்பட்டியலின் படியே பதவி உயர்வு / பணி மாறுதல் கலந்தாய்வு இணையதளம் வழியே 13.11.2019 அன்று நடைபெற்று ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாளது தேதியில் காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 01.01.2019 நிலவரப்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் எஞ்சிய 1050 ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுவதுடன் அவர்களது பணிவிவரங்கள் சரியாக உள்ளனவா, என்பது குறித்தும் பணி ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் விவரங்களை நீக்கம் செய்வது குறித்தும் சேர்க்கை /நீக்கம் விவரங்களை இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.12.2021க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது,
மேலும், 01.01.2022 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் குறித்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை கவனத்தில் கொண்டு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அளிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு
விண்ணப்பத்தினை பதிவிறக்க DOWNLOAD
01/01/2022 நிலவரப்படியான தகுதி வாய்ந்தோர் பட்டியல் DOWNLOAD
0 கருத்துகள்