Flash News

9/recent/ticker-posts

e-PAN Card Download செய்வது எப்படி?

 


இந்திய மக்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவது, வருமான வரித் தாக்கல் செய்வது, பணப் பரிவர்த்தனைகள் என பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு மிக அவசியமான ஆவணமாக உள்ளது.

பான் கார்டு திடீரென தொலைந்துவிட்டால் சில அத்தியாவசிய பணிகளை முடிப்பதே பெரிய சிரமமாகிவிடும். இதுபோல நீங்களும் பான் கார்டு தொலைத்துவிட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம்.

ஆதார் கார்டினை நாமே Download செய்வது போல் e-PAN Card னை நாமே Download செய்து கொள்ளலாம். வெறும் 10 நிமிடங்களில் நீங்கள் PAN கார்டு வாங்கிவிடலாம்.

இ-பான் கார்டு (e-PAN card) எனப்படும் டிஜிட்டல் கார்டை சில நிமிடங்களிலேயே டவுன்லோடு செய்துவிடலாம். 

அதனை எவ்வாறு எளிமையாக பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

முதலில் NSDL இணையதளத்திற்கு இ-பான் கார்டு பிரிவுக்கு செல்லவும். அதற்கு இந்த e-PAN Card Download இணைப்பை கிளிக் செய்யவும்.

1. அதில் download e-PAN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

2. உங்கள் பான் எண்ணை பதிவிடவும்

3. பின்னர் ஆதார் எண்ணை பதிவிடவும்

4. பிறந்த தேதியை பதிவிடவும்

5. உங்கள் மொபைலுக்கு OTP அனுப்பப்படும்

6. OTP பதிவு செய்து Confirm செய்யவும்.

7. பின்னர் கட்டணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் 8.26 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

8. இப்போது நீங்கள் இ-பான் கார்டு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்