கலந்தாய்வு மாறுதல் அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெனியீடு
இனி புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு கட்டாய இட மாறுதல்
அவசரத் தேவை எனில் நிருவாக மாறுதல் செய்யலாம்.
பணி நிரவல்
1. இந்த ஆண்டு பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யக்கூடாது
முன்னுரிமை விவரம்
1. 100% கண்பார்வையற்றவர்
2. 40% மேல் உடல் ஊனமுற்றோர்
3. உடல் ஊனமுற்ற , மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை உடைய ஆசிரியர்கள்
4. இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிஸ் செய்ய வேண்டியவர்கள், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு முன்னுரிமை
5. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவிகள்
6. 40 வயது மேலான முதிர் கன்னியர்
7. 30 கி.மீ க்கு மேல் பணியாற்றும் கணவன்/மனைவி
விண்ணப்பிக்கும் முறை
1. முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழை உடனயாக பெற்று தயார் வைத்திருக்கவும்.
2. ENIS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும் .
3. மாவட்டத்திற்குள்/வேறு மாவட்டத்திற்கு ஒரே ஒரு விண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கவேண்டும்.
4. ஆண் ஆசிரியர்கள் இருபாலர் பள்ளி மற்றும் ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே மாறுதல் பெற இயலும்.
மாறுதல் கோருபவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அதே பள்ளியில் பணியாற்றியிருக்கவேண்டும். ஒரு ஆண்டுக்கு குறைவாக பணியாற்றிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.
5. ஓய்வு பெறுவதற்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் உள்ளவர்கள் மட்டுமே Mutual மூலம் மாறுதல் கோரி விண்ணப்பிக்க இயலும்.
அரசாணையை பதிவிறக்க
Previous Years Transfer Orders
0 கருத்துகள்