Flash News

9/recent/ticker-posts

மாறுதல் கலந்தாய்வு-Spouse Priority இல் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் தெரிவு செய்யலாம்-பள்ளிக் கல்வி ஆணையரின் திருத்திய அறிக்கை

தற்போது நடைபெறும் கலந்தாய்வில் Spouse Pririty யில் முன்னுரிமை கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன்/மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும் என ஏற்கனவே இருந்த நடைமுறையை மாற்றி எந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளை வேண்டுமானாலும் தெரிவு செய்துகொள்ள அனுமதியளித்துபள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்ந்த பின்னர் 3 ஆண்டுகளுக்கு Spouse Periority முன்னுரிமை கோர இயலாது எனவு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின் முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களது சுழற்சி வரும்பொழுது உள்ள காலிப்பணியிடத்தினை மட்டுமே தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு தெரிவு செய்ய அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் முறையீடுகள் அல்லது ஆட்சேபனை இருப்பின் அதனை EMIS இணையதளத்தில் 25-01-2022 மாலை 8.00 வரை தெரிவிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் திருத்திய செயல்முறைகள் பதிவிறக்க


பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்