Flash News

9/recent/ticker-posts

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

 பொதுவாக வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும். 

2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31, என முன்னதாக அறிவிக்கப்பட்டு  இருந்த நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக வருமான வரி தாக்கல் (ITR Filing) செய்ய ஜூலை 31 ஆம் தேதி தான் கடைசி நாளாக இருக்கும்.  ஆனால், கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாகவும்  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும், முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும்,  மற்றும் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்யவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டது.

Income Tax Circular 

கருத்துரையிடுக

0 கருத்துகள்