ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை பள்ளி அளவில் EMIS இல் முதலில் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் School EMIS login இல் Staff detail இல் Teacher's Profile Update செய்யவும். பின்னர் Login செய்து பதிவு செய்யவும். EMIS இல் மாறியிருப்பின் மாறுதல் விண்ணப்பத்திலும் அதேதான் தோன்றும். ஆகவே கவனமாக செயல்படவும்.
கீழ்க்காணும் EMIS இல் தனியரின் கணக்கில் Login செய்து உள்ளே செல்லவும். அதில் My Profile click செய்து Teacher Transfer என்பதை click செய்யவும்.
கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை Upload செய்யவேண்டும்.
பின்னர் Submit Button click செய்யவும்.
User ID என்பது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7 இலக்க எண் ஆகும் . 10 என ஆரம்பிக்கும். கடவுச்சொல் உங்களின் மொபைல் எண்ணில் முதல் 4 இலக்கம் உடன் @ மற்றும் பிறந்த நாளின் வருடத்தின் 4 இலக்க எண் ஆகும்.
Example
User ID: 10058023
Password: 6599@1234
தலைமைஆசிரியர் Approve செய்யும் முறை
தலைமைஆசிரியர்கள் தங்களின் School IDயை Login செய்து Staff detail இல் ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Transfer Application Approval click செய்து Approve செய்ய வேண்டும்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் தனியரின் கணக்கில் Login செய்து உள்ளே சென்று வலது மூலையில் உள்ள Print என்பதனை கிளிக் செய்து மூன்று நகல்கள் எடுத்து தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்.
அதில் ஒன்றினை தலைமைஆசிரியர் கையொப்பம் பெற்று வைத்துக்கொள்ளவும். மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 10-01-2022 திங்கள் காலை 11.00 க்குள் ஒப்படைத்திடல் வேண்டும் .
தலைமைஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். விவரங்களை அவர்கள் EMIS இல் பதிவு செய்வார்கள்.
0 கருத்துகள்