ஏற்கனவே ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு Online மூலம் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் வேண்டுவோர் விண்ணப்பத்தினை Online மூலம் 08.12.2021 முதல் 22.12.2021 வரை பதிவு செய்துகொள்ளவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கோரும் இனங்களில் அதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.12.2021 மாலை 6.00 மணிக்கு எக்காரணத்தை முன்னிட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை அலுவலர்கள் மூலமாக பதிவு மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரி
மேற்காண் இணைப்பை கிளிக் செய்து தங்கள் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி Online செய்து விண்ணப்பங்களை பதிவேற்றலாம்.
ஆதிதிராவிட நலத்துறை மாறுதல் விண்ணப்பம் பதிவிறக்க
இதே போல் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணை இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைஆசிரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு பூஜ்ஜியக் கலந்தாய்வு நடைபெறாது எனவும் கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளில் சில மாறுதலுக்குட்பட்டு ஆணை வெளியாக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
முன்னுரிமை கோரும் இனங்களில் அதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென்பதால் அதற்கு தயாராக இருக்கவும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
1 கருத்துகள்
ஏமாற்றம் மட்டுமே