புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்கள் தி.மலை,திருவள்ளுர் மாவட்டத்தில் IFHRMS இணையத்தில் தற்காலிக பணியிடமாக G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 நாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை சரிபார்க்க Initiator ID யில் login செய்யவும்.
அதில் HR-Report viewer- click செய்து post detail என்பதில் action button click செய்யவும்.
பின்னர் தோன்றும் திரையில்Report Format இல் Excel என்பதை தேர்வு செய்து Submit Button - ஐ click செய்யவும்.
Excel Format Download ஆகும். அதில் G.O.MS.NO. 92, School Education (SE 5(1)) Department 18-MAY-2022 அரசாணையில் உங்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் Vacant என காண்பிக்கும். அதில் Post category என்பதை குறித்துக்கொள்ளவும். எ.கா. BACHELOR OF TEACHING ASSISTANT
பின்னல் Transfer and Posting என்பதை click செய்து Joint Report Entry -ஐ செய்து My saved List என்பதை click செய்யவும். உங்கள் பள்ளிக்கு மாறுதலில் வந்துள்ள ஆசிரியர் பெயர் காட்டும். அதில் action button click செய்யவும். கீழ்க் கண்ட பதிவுகளை செய்யவும்
Transfer order No
Post type ல் Temporary என்பதை select செய்யவும்
Joining category BACHELOR OF TEACHING ASSISTANT
Post என்பதில் search Button என்பதை search செய்து பணியிடத்தினை தெரிவு செய்யவும்.
HOA இல் 220202109AA என்பதை தெரிவு செய்யவும்.
Joining Date என்பதில் அவர்கள் பணியிடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாள் மற்றும் முற்பகல்/பிற்பகல் என வலது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனையே Joining Date இல் குறிப்பிடவும். அப்பொழுதுதான் ஊதியம் முழுவதுமாக பெற இயலும். பின்னர் அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்து Review and Submit செய்யவும். பின்னர் Approve கொடுக்கவும்.
பின்னர் HR-GTN Pay service - Temporary Post detail click செய்து Call WebAdi download செய்து End Date (Date of Joining of Person) enter செய்து upload செய்யவும். அப்பொழுது தான் Bill Generate ஆகும்.
0 கருத்துகள்