Flash News

9/recent/ticker-posts

Cell 40 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு - விளக்கம்

 Revised Levels of Pay ன் இறுதிநிலை (இ.நி.ஆசிரியர்களுக்கு 20600 - 75900) அடையும் வரை ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்றும் அதற்கு பின்னரே stagnation increment என்பதை விளக்கும் தொகுப்பு 


  Pay Matrix Level 10 ல் Cell 40 ல் 65500 ஐ அடைந்தவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்காமல், இனி இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஆண்டு ஊதிய உயர்வு எனக் கூறப்பட்டு சில இடங்களில் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூறப்படும் காரணம் நி.து.அ. 90 நாள்: 26.02.21 ல் for sanction of stagnation increment என கூறப்பட்டுள்ளது என்று கூறப்படுவதுடன், மேலும் அரசாணை 303 நாள் 11.10.2017 ல் Rule 11(3) ல் சொல்லப்பட்டுள்ள தகவல்களை மாற்றுப் புரிதல் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளினாலும் மறுக்கப்படுகிறது. 


     தற்போது முதலாவதாக அரசாணை 303 ன் Rule 11(3) ல் கூறப்பட்டுள்ளதையும், அது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மறுக்கப்படுகிறது என்பதை விளக்கிட விரும்புகிறேன். ( Existing Pay Structure, Existing Pay Band, என்பவற்றின் பொருள், முந்தைய ஊதிய விகிதம், ஊதிய கட்டு - அதாவது ஆறாவது ஊதிய குழு பற்றியது. Revised Pay Structure என்பது திருத்திய ஊதிய விகிதம் அதாவது ஏழாவது ஊதிய குழு ஊதிய விகிதங்கள் ஆகும்.) 


    அரசாணை 303 ல் பக்கம் 3 மற்றும் 15 என இரு இடங்களில் Stagnation Increment and Bonus increment பற்றிய ஒரே தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும். 


     Rule 11(3) ல் In respect of employees stagnating at the maximum of the existing Pay Band for more than two years as on 1.1.2016, One increment in the applicable level in the Pay Matrix shall be granted on 1.1.2016 for every two completed years of Stagnation at the maximum of the said Pay Band என உள்ளது. அதாவது Existing Pay Band - ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் Scale of Pay ன் இறுதியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 1.1.2016 ன் படி தேக்க நிலையில் இருப்பவர்களுக்கு, தற்போதைய Pay Matrix ல் இரண்டாண்டுகளுக்கு ஒரு increment வழங்கிட கூறப்பட்டுள்ளது. இதனை இதில் குறிப்பிட்டுள்ள schedule -V Illustration IV ன் மாதிரியுடன் ஒப்பிட்டு பார்த்த பின்னர் அதனைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ள வரிகளின் பொருள்களை காண்போம். Illustration ல் ஆறாவது ஊதிய குழுவின் இரண்டு Pay Band பிரிவினரைக் குறிப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. முதலாவதாக PB - 1A ஊதிய விகிதம் 4800 - 10000 GP 1300 பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அதில் (வ.எ.1) maximum permissible pay 10000 + GP 1300 = 11300. இதனை இவர் (வ.எ. 2) 1.7.2013 ல் அடைந்துவிட்டார். வழக்கமான நிலையில் உள்ளவர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவில் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 அன்று உள்ள ஊதியத்தை 2.57 ஆல் பெருக்கி Pay Matrix ல் நிர்ணயித்திருப்போம். இங்கே இந்த Illustration ல் குறிப்பிட்டுள்ள ஊதிய விகிதத்தினர் 1.7.2013 லேயே ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் Scale of Pay இறுதியை (11300 ஐ) 1.7.2013 ல் அடைந்திருந்ததால் இவர்களுக்கு 1.7.2013 அன்றே 2.57 ஆல் பெருக்கி Pay Matrix ல் 29300 ல் நிர்ணயம் செய்து ( வ.எ.3), அதற்கும் 1.1.2016 க்கும் இடைப்பட்ட காலமான ( வ.எ.4) 2 years 6 months காலத்திற்கு ஒரு increment என்ற கணக்கின்படி ஒரு increment ( வ.எ.5), வழங்கி 1.1.2016 ல் Pay Matrix ல் இந்த ஊதிய விகிதத்தினருக்கு 30200 (வ.எ.6) என நிர்ணயம் செய்துள்ளனர். 


     மீண்டும் சுருக்கமாகச் சொன்னால், அனைவருக்கும் 1.1.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்வார்கள். ஆனால் முந்தைய ஆறாவது ஊதிய விகிதத்தில் Scale of Pay இறுதியை 1.1.2016 க்கு முன்னரே அடைந்தவர்களுக்கு அவர்கள் எப்போது அடைந்தார்களோ ( அட்டவணையில் 1.7.13.) அன்றே 2.57 ஆல் பெருக்கி, அதிலிருந்து 1.1.16 வரை உள்ள இடைப்பட்ட காலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு  ஊதிய உயர்வு எனக் கணக்கிட்டு 1.1.16 ல் நிர்ணயிக்கப்பட வேண்டும். (இவ்வாறு நிர்ணயிக்கும் போது சம்பந்தப்பட்ட Pay matrix - ன் அனுமதிக்கப்பட்ட Level தாண்டி ஊதியம் நிர்ணயம் செய்யக் கூடாது என Rule 11(3) ன் பிற்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)


    ஆக Rule 11(3) ல் உள்ள இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என்ற முறை 1.1.16 ல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது பின்பற்றக் கூறப்பட்ட முறை.


     இதனை தற்போது இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் அரசாணை எண். 90 வருவதற்கு முன்னர் Pay Matrix Level 10 ல் இருந்த 40 - வது cell - ஐ (65500) அடைந்தவுடன், அடுத்து இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என தவறாகப் புரிந்து கொண்டு ஆண்டு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது.

ஏழாவது ஊதியக் குழுவில் Pay Matrix ல் Levels of Pay - ல் இறுதி நிலை அடைந்தவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என அரசாணை எண் 303 நாள்: 11.10.17 ல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் தயவுசெய்து ஆதாரத்துடன் சுட்டிக்காட்டலாம். 


  பொதுவாக அனைவருக்கும் 1.1.2016 அன்று 2.57 ஆல் பெருக்கி நிர்ணயிக்கப்படும் போது, முந்தைய ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் இறுதிநிலை அடைந்தவர்களுக்கு, 1.1.16 க்கு முன்னதாக இறுதிநிலை அடைந்த நாளிலேயே 2.57 ஆல் பெருக்குவதால், அங்கிருந்து ஆண்டுக்கொரு முறை ஊதிய உயர்வு வழங்கினால் தொகை கூடுதலாகும். எனவே அவர்களுக்கு முன்னதாகவே 2.57 ஆல் பெருக்குவதால் அதிலிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என கணக்கிடப்பட்டது. 


    இதுதான் Rule 11(3) ன் ஊதிய நிர்ணய நிலைகள். 


   அடுத்ததாக அரசாணை 90 - ல் உள்ள for stagnation increment என்ற வரிகளைக் குறிப்பிட்டு மறுக்கப்படுகிறதைப் பற்றிப் பார்க்கலாம். இதில் அரசாணையின் Abstract - ல் உள்ள வாசகம் - creation of additional cells in pay level - என்பதாக உள்ளது. 


    இதில் பத்தி(3) - ல் Official committee பரிந்துரைக்கிறது - five more cells for each levels in the pay matrix for the use of employees - எவ்வகை ஊழியர்களுக்கு, எதற்காக எனப் பார்த்தால், who reach the highest calculated cell of the levels in the Pay Matrix..... அதாவது Pay matrix ல் உள்ள Level களில் இறுதி cell அடைந்தவர்களுக்கு - for sanction of stagnation increment - தேக்க ஊதிய உயர்வு அனுமதிக்க என குழு பரிந்துரைக்கிறது. ( இது குறித்து தனியாக கீழே குறிப்பிட்டுள்ளேன்.)


      பத்தி(4) - ல் அரசு ஏற்கிறது. ஏற்றுக்கொண்டு அரசாணை 303 - ல் இருந்த Schedule 1 and III மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக அரசாணை 90 - ன் அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது. *அதில் Schedule I - ல் Levels of Pay திருத்தியமைக்கப்பட்டு, Revised Levels of Pay என்ற நிலையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Schedule III - ல் Revised Levels of Pay - ன்படி  Pay cells மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 


இப்போது பத்தி 3 க்கு வரலாம். இதில் who reach என்ற வார்த்தை மிக முக்கியப் பங்காற்றுகிறது. Who reached (அடைந்தவர்களுக்கு) என இருந்திருந்தால் அரசாணை 303 - ல் உதாரணத்திற்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு Level 10 ல் 40 - வது cell அடைந்தவர்களுக்கு stagnation increment வழங்க five more cells எனக் கூறி 65500 க்கு பின்னர் stagnation increment எனக் கூறினால் கூட ஏற்கலாம். ஆனால் who reach என ( யார் அடைகிறார்களோ) five more cells நீட்டித்த பின் யார் அடைகிறார்களோ அவர்களுக்கு for sanction of stagnation increment என்றே பொருள்படுகிறது.


   இறுதியாக ஒரு கருத்தை முன்வைத்து நிறைவு செய்கிறேன். ஆறாவது ஊதிய குழுவில் Stagnation increment என்ற தலைப்பில் Rule 5(1)- ல் G.P. 6600 - ம் அதற்கு மேலும் பெறுபவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு increment வழங்கப்பட்டது. அது ஏழாவது ஊதிய குழுவில் Rule 11(a) - ல் Level 25 and above பிரிவினருக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.


    அதுபோல Rule 5(ii) - ல் உள்ளதைப் போலவே ஏழாவது ஊதிய குழுவில் Rule 11(b) - ல் உள்ளதைப் போலவே ஏழாவது ஊதிய குழுவில் Rule 11(b) - ல் 30 years - க்கு Bonus increment அனுமதிக்கப்பட்டுள்ளது.


    ஆறாவது ஊதிய குழுவில் Rule 5(iii) - ல் ஊதியநிலையில் இறுதிநிலை அடைபவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை stagnation increment வழங்கிட குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஏழாவது ஊதிய குழு அரசாணை 303 - ல் அனுமதிக்கப்படவில்லை. அது தற்போது அரசாணை எண் 90 மூலம் five more cells நீட்டிக்கப்பட்டு இறுதிநிலை அடைபவர்களுக்கு ( As per Revised Levels of Pay) Stagnation increment வழங்கிடவும் அனுமதிக்கிறது.


   எனவே அரசாணை 90 - ன் அட்டவணைப்படி Revised Levels of Pay  - for example இ.நி.ஆசிரியர்களுக்கு 20600 - 75900 அடைந்தவுடன் stagnation increment இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அரசாணைப்படி வழங்கலாம்.


 அரசாணை 303 - ன் Rule 11(3) - ன் விளக்கத்தை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். அது 1.1.2016 - ல் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது பின்பற்ற வரையறுக்கப்பட்ட ஒரு முறை.

அரசாணை எண் 91 Download


கருத்துரையிடுக

0 கருத்துகள்