கடந்த ஜீன் 2020 முதல் IFHRMS - புதிய இணைய தளம் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதிய உண்டியல்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் ஓராண்டாக படிப்படியாக சரி செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இதனை முழுமையாக செயல்படுத்த இதுநாள் வரை இயலவில்லை. இந்த இணையம் மூலம் உண்டியல்கள் அனுமதிக்கப்படும் பொழுது Paperless ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேலையும் அதிகரித்து காகிதமும் முன்பை விட அதிக அளவில் செலவாகிறது. முந்தைய epayroll இணைய தளம் user friendly ஆக இருந்தது. அது மட்டுமில்லாது தொழில் நுட்பக் கோளாறுகள் என்பது வெகு குறைவாக இருந்ததோடு மட்டுமில்லாமல் உடனுக்குடன் சரிசெய்யப்ட்டு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இந்த IFHRMS - இல் தினம் தோறும் புதிய புதிய கோளாறுகள் தோன்றுவதோடு மட்டுமல்லாது ஒவ்வொறு கோளாறுக்கும் அதனை நிர்வகிக்கும் ஊழியர்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதனால் கருவூலக அதிகாரிகளும் ஊழியர்களும் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகின்றனர். உண்டியல்கள் தயார் செய்வதே மிப் பெரிய Task ஆக உள்ளது. உண்டியல்களை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் Approve செய்ய DSC ( Digital Signature Certificate) தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இதுவும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதற்குள் இதனை மாற்ற IFHRMS - ஐ நிர்வகிக்கும் கம்பெனி புதிய நிலையை உருவாக்க முயன்று வருகிறது. ஏற்கனவே உள்ளதையே முழுமையாக நடைமுறைபடுத்த இயலாத நிலையில் புதிய வழிமுறையில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் Approve செய்ய மென்பொருள் உருவாக்க இருப்பதாக அறியப்படுகிறது. அது இதைவிட Complicated ஆக இருக்கலாம் . அதாவது ஒவ்வொரு அலுவலகத்திற்கும் Domain create செய்து அதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் Approve செய்யுமாறு உருபாக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. இதனால் ஒவ்வொரு அலுவலகமும் தனியாக இதற்கென System or Laptop பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். அந்த System or Laptop இந்த பணிக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படும். தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் அதற்குத் தகுந்த System or Laptop இல்லாத நிலையே உள்ளது. தற்போது உள்ள அலுவலக ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாத நிலையே உள்ளது. இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வந்தால் ஊழியர்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்வார்கள். இணைய வழி ஊதிய பட்டியல் தயாரிப்பது வேலை பளுவை குறைப்பதற்காகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த இணையம், ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருப்பதை தவிர்க்க அரசு உரிய ஆவண செய்யும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
0 கருத்துகள்