9 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகை xன்றிய அரசு வழங்குகிறது. பீடி தொழிலாளர் குழந்தைகள், முஸ்லிம், கிறித்தவர் ஜெயினர் போன்ற மைனாரிட்டி கம்யூனிட்டி கழந்தைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆகியோர் கல்வி உதவித்தொகை 30.11.2021 க்குள் scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். பெற்றோருக்கு ஒரே பெண்ணாக 30 வயதுக்குள் உள்ள பெண்கள் உயர் கல்வி(PG Course) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணம் மட்டுமே உதவித் தகையாக பெற இயலும். பல்கலைக் கழகத்தில் தர வரிசையல் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் உயர் கல்வி(PG Course) உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அச்சு நகலுடன் தாங்கள் பயிலும் பள்ளி அல்லது கல்லூரியில் உரிய இணைப்புகளுடன் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பிப்பதற்கு AAdhar எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்