Flash News

9/recent/ticker-posts

தொழிற்கல்வி பயில EMIS இணையதளத்தில் அரசு பள்ளி மாணவருக்கான 7.5% இட ஒதுக்கீடு எவ்வாறு சரி பார்ப்பது?


MBBS, BE, B.Tech போன்ற தொழிற்கல்வி பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளது. தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும்  கல்விக் கட்டணம் முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளது. இதனை EMIS இணையதளத்தில்  அரசு பள்ளி மாணவர் என்பதற்கான விவரத்தினை சரிபார்க்க வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

7.5% இட ஒதுக்கீட்டிற்கான அரசு பள்ளி மாணவர் என்பதை எவ்வாறு சரி பார்ப்பது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

முதலில் EMIS இணையதளத்தில் user ID and password கொடுத்து உள்ளே சென்றவுடன் இடது பக்கத்தில் Schools என்பதனை click செய்யவும். கீழே தோன்றும் தலைப்பில் DOTE Verification உள்ளதா என பார்க்கவும். இருந்தால் இதனை click செய்யவும். 


உங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள்  தொழிற்கல்வி பயில விண்ணப்பித்திருந்தால் அவர்களின் பெயர்கள் அங்கே தோன்றும் பெயருக்கு நேரே வலது கோடியில் பச்சை விண்ணத்தில் உள்ள Action Button ஐ click செய்யவும்.
பின்னர் தோன்றும் Window வில் XII  to VI ன் அருகில் உள்ள check Box ,ல் Tick செய்தால் select District, select School Type, Select School ஆகிய காலங்கள் தோன்றும் . அதில் விவரங்களை தேர்வு செய்து பின்னர் save Button click செய்யவும். update successfully என தோன்றும் . இது போன்றே அனைத்து மாவணாக்கர்க்கும் செய்யவும். நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்