இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள NEET 2021 தேர்விற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான MBBS, Siddha, Ayurvedha, Yunani , Homeopathy படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை ஒன்றிய அரசின் சார்பில் நடத்துகிறது. நாடு முழுவதும் 202 மையங்களில் செப்டம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிநது. நாடு முழுவதும் NEET 2021 தேர்வு நடைபெறும் மையங்களின் பட்டியலை தேசியத் தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வு மையங்களின் பட்டியலை அறியலாம். https://neet.nta.nic.in/ இணையதளத்தில் சென்று View Advanced Information For Allottement of Centre City என்பதை click செய்ய வேண்டும். பின்பு NEET தேர்வு விண்ணப்ப எண் (application no), பிறந்த தேதி, கடவுச்சொல் (password) ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு மையத்தை அறிந்து கொள்ளலாம். விருப்பப்பட்டால் தேர்வு மைய விவரங்களை பதிவிறக்கம்(download) செய்தும் கொள்ளலாம்
0 கருத்துகள்