Flash News

9/recent/ticker-posts

புதிய பணியிடங்களை IFHRMS இணைய தளத்தில் பதிவேற்ற துறை அலுவலரிடம் கோரும் விண்ணப்பம்

IHFRMS இல் ஊதியப் பட்டியல் தயாரிக்க ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வரும் அலுவலர்களுக்கு தற்போது புதிய பணியிடங்களை IFHRMS இணையதளத்தில் சேர்க்க துறை அலுவலரை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய பணியிடம் சேர்க்க கருவூலக அலுவலரை அணுகினால் அதற்கான Option எங்களிடம் இல்லை . அந்தந்த துறைத் தலைவர்களிடம்தான் உள்ளது என தெரிவிக்கின்றனர். அனைத்து துறைத் தலைவர் அலுவலகங்களும் சென்னையில் இருப்பதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தற்போது கல்வித்துறையில் புதிய பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டும் பணி நிரவல் காரணமாக பணியிடத்துடன் கூடிய மாறுதல் பெற்று புதிய பணியிடத்தில் பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு இம்மாதம் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலரிடமோ அல்லது கருவூலக அலுவலரிடமோ அதற்கான Option ஐ வழங்கினால் பெரும் சிரமத்தை தவிர்க்க ஏதுவாக இருக்கும். இதனால் மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில்உள்ள இடர்பாடுகள் தீரும்.. இதனை அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தை பதிவிறக்கம் செய்து உங்களின் அலுவலக விவரங்களை பூர்த்தி செய்து புதிய பணியிங்களை IFHRMS இணைய தளள்ததில் சேர்க்க கோருங்கள். 




T

கருத்துரையிடுக

0 கருத்துகள்