Flash News

9/recent/ticker-posts

15.02.2022 செவ்வாய் முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையர்

 நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை  கலந்தாய்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக  பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வித் துறையில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வுகள் தேதி நாளை (15-02-2022) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் பதிவிறக்க





முன்னதாக முதுகலை ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தக் கோரி DPI & மாநிலம் முழுக்க முதன்மைக்கல்வி அலுவலங்கள் எதிரே முதுகலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் கடந்த 3 மணி நேரமாக நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

0 கருத்துகள்