Flash News

9/recent/ticker-posts

How to Create Own Website for You?

How to Create Own Website for You?
1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.
2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.
3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.
4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.
5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள்.
6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ் நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணைய முகவரி அல்ல.தலைப்பு மட்டுமே)
7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியை கொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும் உங்களது ப்ளாக்கர் முகவரி. எல்லாம் small letters இடைவெளியின்றி தர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின் .blogspot.com என்பது default ஆக வரும் Example: (www.gurookulam.blogspot.in). எனவே மிக எளிதாகத் தரவும்.
8.Template(எப்படி தோன்ற வேண்டும்) என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
9.create blog என்பதை க்ளிக் செய்யவும்.
10.இடது மூலையில் தென்படும் new post ஐ க்ளிக் செய்யவும். 
11.எழுதப் போகும் பதிவிற்கான தலைப்பை post title என்ற பகுதியில் கொடுக்கவும்.
12.compose பகுதியில் கீழ் தெரியும் பெரிய தாள் போன்ற பகுதிக்குள் மேல் கொடுத்த தலைப்பு தொடர்பான படைப்பை பதிவு செய்யவும்.
13.பதிவில் எழுத்துகளை பெரிதாக்க,சிறிதாக்க,தடித்த,சாஇந்த எழுத்துகளை பயன்படுத்த, அவற்றின் நிறத்தை மாற்ற, அடிக்கோடிட, படங்களை,வீடியோக்களை இடைச் செருக, ஒரு  இணைப்பை வேறொரு பக்கத்திலிருந்து இங்கே வழங்க- இது போன்ற செயல்களுக்கு நீங்கள் எழுத ஆரம்பிக்கும் இடத்திற்கு மேலே உள்ள விருப்பங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.
14.பதிவை முடித்த பிறகு பதிவு சார்ந்த குறிப்பினை வழங்க வலது பக்கம் தோன்றும் lables என்பதை க்ளிக் செய்ததும் தோன்றும் சிறிய பெட்டிக்குள் குறிப்பினை கொடுக்கவும். பின்னர் கீழே உள்ள Done என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.
15,இறுதியாக Post Title க்கு வலது புறம் தோன்றும் Publish என்ற வார்த்தையை க்ளிக் செய்ய, உலகத்தின் எந்த இணைய இணைப்புள்ள ஒரு கணினியிலிருந்தும் உங்கள் ப்ளாக் முகவரி தெரிந்த எவரும் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்